UK-வில் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்! வரலாறு காணாத சாதனை
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வசூலை குவித்து வருகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது UK-வில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம் அதன்படி £1.24M அதாவது இந்திய மதிப்பின படி ரூ. 11 கோடி வசூலை குவித்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவ்யா அறிவுமணி விலகயதற்கு, என்ன காரணம் தெரியுமா?