அமெரிக்காவிலேயே வசூலில் மாஸ் காட்டியுள்ள பொன்னியின் செல்வன்- வசூல் வேட்டை விவரம் இதோ
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமா பெருமையடையும் வகையில் மாஸாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகி இருந்தது.
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த 2 பாகங்களை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
வெறும் 150 நாட்களில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார் மணிரத்னம், அதுவே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
பட வசூல்
முதல் நாளில் ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் 5 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தற்போது படம் வெளிநாட்டிலும் அதிகம் வசூலித்த படங்களில் இப்படம் டாப் இடத்தை பிடித்துள்ளதாம். பொன்னியின் செல்வன் படம், அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இந்த படம் 32.56 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
#PS1 on its way to become Highest Grossing Tamil movie in ??
— Sarigama Cinemas (@sarigamacinemas) October 3, 2022
$4 Million+ & counting…
SENSATIONAL BLOCKBUSTER #PS1 ??
??release by @sarigamacinemas#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tentkotta @kalraman2016 #PonniyinSelvan pic.twitter.com/X7gtlufTAd
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியால் நிறுத்தப்பட்ட பிரபல சீரியல்- ரசிகர்கள் ஷாக்