சமந்தா உடனான சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகை பூஜா ஹெக்டே !
மீண்டும் தமிழில் பூஜா
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே.
தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகர்களுடன் கலக்கி வந்த பூஜா தற்போது பல வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா.

சமந்தா உடனான சர்ச்சை
இந்நிலையில் பல நாட்களுக்கு முன்பு சமந்தாவை விமர்சித்து தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பூஜா ஹெக்டே கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் பூஜா தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டு விட்டது என்று அவர் விளக்கம் அளித்தார்.
பூஜா ஹெக்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ‘உங்களுக்கும், சமந்தாவுக்கும் பிரச்சினையாமே...’, ‘அவரை கடுமையாக விமர்சித்தது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பூஜா பதில் அளிக்கையில், ‘‘நேர்மறையான விஷயங்களை விட எதிர்மறையான விஷயங்கள் தான் அதிகம் பேசப்படுகின்றன. அது உண்மையில்லை என்றாலும் அதை பற்றிதான் அதிகம் விவாதிக்கின்றனர். நான் எப்போதும் நேர்மறையாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..