மணமகள் கோலத்தில் நடிகை பூஜா ஹெக்டே.. கல்யாணமா!
பூஜா ஹெக்டே
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. ஆனாலும், பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்டில் எந்த ஒரு சரிவும் ஏற்படவில்லை.

தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
நடிப்புக்கு எந்த அளவிற்கு பூஜா பிரபலமோ, அதே அளவிற்கு அவருடைய போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.
மணமகள் உடையில்
பூஜா ஹெக்டே வெளியிடும் போட்டோஷூட் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் கட்டு தீ போல் பரவும். அந்த வகையில் திருமண கோலத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டேவை பார்த்த ரசிகர்கள் சிலர், பூஜா ஹெக்டேவிற்கு திருமணமா என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால், அப்படியெல்லம் ஒன்றுமில்லை, இது வெறும் போட்டோஷூட் தான் என்று அதன்பின் தெரிந்துகொள்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


