பல கோடி மதிப்புள்ள புதிய கார் வாங்கிய பூஜா ஹெக்டே.. இதோ பாருங்க
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டேவிற்கு, அப்படம் தோல்வியை கொடுத்தது.
அதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற பூஜா தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
பின் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் இன்னும் பல படங்களில் நடிக்க ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பூஜா ஹெக்டே புதிய கார்
தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை சென்றுள்ள இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ரூ. 4 கோடி மதிப்பில் Range Rover எனும் பிரமாண்ட சொகுசு காரை வாங்கியுள்ளார். இதோ பாருங்க..