சூர்யா படத்தை முடித்த கையோடு விஜய்யுடன் இணையும் முன்னணி நடிகை! யார் தெரியுமா
தளபதி 69
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 69. இதுவே அவருடைய கடைசி படம் ஆகும். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தனது திரை பயணத்தை இப்படத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
தளபதி 69 படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஹெச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
அக்டோபர் மாதம் முதல் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளிவந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா வந்தது.
விஜய்யுடன் இணையும் முன்னணி நடிகை
ஆனால், கடந்த சில நாட்களாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே முடித்துவிட்டாராம். சூர்யாவுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து விஜய்யுடன் தளபதி 69ல் பூஜா கைகோர்க்கிறார் என சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
விரைவில் இப்படத்தின் கதாநாயகி குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
