இந்த வார இறுதியில் முடியப்போகும் சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இதில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இதுவரை எக்கச்சக்கமான தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் செம சூப்பர் டூப்பர் ஹிட் எல்லாம் ஆகியுள்ளது.
தற்போது ஒளிபரப்பாகி வரும் ரோஜா, பூவே உனக்காக, கயல், வானத்தை போல, சுந்தரி போன்ற தொடர்கள் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெற்று வருகின்றன. TRPயிலும் இந்த சீரியல்களுக்கான இடம் டாப்பில் உள்ளது.
முடிவுக்கு வரும் தொடர்
புத்தம் புதிய தொடர்கள் வர வர ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத தொடர்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன. அப்படி இந்த வார இறுதியில் அதாவது ஜுன் 18ம் தேதி சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பூவே உனக்காக என்ற தொடர் முடிவுக்கு வருகிறதாம்.
இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
குழந்தை பிறந்த அடுத்த நொடியே நடிகை பிரணிதா செய்த விஷயம்- அவரே வெளியிட்ட வீடியோ