ரஜினி-ய காமெடியனா போடுங்க, நான் ஹீரோவா நடிக்கிறேன்.. தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்த உச்ச நடிகர்
சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்தை காமெடியாக நடிக்க சொல்லுங்க நான் ஹீரோவா நடிக்கிறேன் என பிரபல நடிகர் நகைச்சுவை நடிகை கவுண்டமணி கூறிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
கவுண்டமணி
நகைச்சுவை கிங் என அழைக்கப்பட்டு வருபவர் கவுண்டமணி. இவர் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார். அப்படத்தில் மொத்தமாக 40 நாட்கள் நடித்துள்ளார்.
அந்த சமயத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவாகவுள்ள எஜமான் திரைப்படத்தில் காமெடியாக நடிக்க கவுண்டமணியை கேட்டுள்ளனர். 15 நாட்கள் கால்ஷீட் வேண்டும் சம்பளம் ரூ. 15 லட்சம் என ஏவிஎம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
ரஜினி-ய காமெடியனா போடுங்க
ஆனால், எனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வேண்டும் என கவுண்டமணி கூறியுள்ளார். இதற்கு ஏவிஎம் என்ன ரூ. 50 லட்சம் கேட்குறீங்க என ஷாக்காகியுள்ளனர்.
அந்த நேரத்தில் சரி நான் ரூ. 15 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு படத்தில் நடிக்க தயார். ஆனால், ஹீரோவாக நான் நடிக்கிறேன், ரஜினிகாந்தை எனக்கு காமெடியாக நடிக்க சொல்லுங்க என கூறினாராம் கவுண்டமணி. இந்த தகவலை பிரபல இயக்குனர் வி. சேகர் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
