ரூ.200 கோடி கொடுத்தாலும் அந்த விஷயத்தை செய்ய மாட்டார்- டி.ராஜேந்தர் குறித்து பாராட்டி பேசிய பிரபல நடிகர்
டி.ராஜேந்தர்
சினிமாவில் ஒரு துறையில் சாதிப்பதே இப்போதெல்லாம் சாதனையாக உள்ளது.
ஆனால் இங்கு ஒருவர் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியல், எடிட்டர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டி சாதித்து காட்டியுள்ளார்.
வேறுயாரும் இல்லை டி.ராஜேந்தர் அவர்கள் தான், இவரை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் ஆல்ரவுண்டர் என்றே கூறலாம். தற்போது இவரைப் பற்றி பெருமையாக பிரபல நடிகர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகரின் பேட்டி
பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க களமிறங்கிய ராமராஜன் ஒரு பேட்டியில் டி.ராஜேந்தர் குறித்து பெருமையாக பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் நான் வியந்து பார்த்த நடிகர்களில் டி.ராஜேந்தர் ஒருவர், எல்லா நடிகர்களை விடவும் வித்தியாசமானவர்.
ராஜேந்திரன் எந்த நடிகையும் தொட்டு நடிக்க மாட்டேன் என்று பெரிய அளவில் ஒரு சபதத்தை போட்டு அதை நிறைவேற்றியும் உள்ளார். 200 கோடி கொடுத்தாலும் சரி நான் கதாநாயகியை தொட்டு நடிக்க மாட்டேன் என்று அவர் வெளிப்படையாகவே கூறி விடுவாராம்.

திருமணமான 1 வருடத்திலேயே உயிரிழந்த கணவர், 2வது திருமண நாளில் சீரியல் நடிகை ஸ்ருதி செய்த செயல்- புகைப்படம் இதோ
இந்த விஷயம் எனக்கு பிறகு தான் தெரியவந்தது, அதற்கு பிறகு நானும் அவருடைய படத்தில் பார்த்தேன்.
ஆனாலும் நான் இந்த விஷயத்தை இத்தனை வருஷமாக கவனிக்காமல் விட்டு விட்டேனே என்று எனக்கே தோன்றியது. ராஜேந்திரனை போல யாராலும் பேச முடியாது,
என்னை பொறுத்த வரைக்கும் அவருடைய நடிப்பு, பேச்சு, இயக்கம் எல்லாமே வித்தியாசமாகவும், புதுமையாகவும் தான் இருக்கும். எனக்கு ராஜேந்திரனை எப்போதுமே பிடிக்கும் என பெருமையாக பேசியுள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
