இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் என்று தெரிகிறதா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தானா
இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை நடிகர் விஷால் தான். ஆம், விஷாலின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதாவை திருமணம் செய்த பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்