தளபதி 68ல் விஜய்யுடன் இணைந்த ஹீரோ.. யார் தெரியுமா
தளபதி 68
லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும், ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் கதை டிஸ்கஷன் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த வருடம் தீபாவளி அன்று தளபதி 68 திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகர் ஜெய் நடிக்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஜெய் தனது திரை வாழ்க்கையை விஜய்யின் பகவதி திரைப்படத்தில் தான் ஆரம்பித்தார்.
மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தளபதி 68 படத்தில் விஜய்யுடன் ஜெய் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
