நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்
நண்பன் படம்
ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நண்பன்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டோர் நண்பர்களாக நடித்திருந்தனர். மேலும் இலியானா கதாநாயகியாக நடிக்க சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நண்பன் என்பதை நாம் அறிவோம். ஆனாலும், அதை சிறப்பாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருந்தார் இயக்குனர் ஷங்கர்.
இன்று வரை தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான டாப் 10 படங்களில் கண்டிப்பாக நண்பனும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா
நண்பன் படத்தில் மிகமுக்கியமான ஸ்ரீவட்சன் எனும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யன் கிடையாதாம்.
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தான் சத்யன் நடித்திருந்த ஸ்ரீவட்சன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம். ஆனால், திடீரென அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதன்பின் தான் அவருக்கு பதிலாக சத்யன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் பாத்திமா பாபு ஷார்ட் உடையில் வெளியிட்ட போட்டோ! ஷாக் ஆன நெட்டிசன்கள்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
