ஜீன்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. கடைசியில் இப்படி நடந்துவிட்டதே
ஜீன்ஸ்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1998ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் கதாநாயகன் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இவர்களுடன் லட்சுமி, நாசர், செந்தில் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் ஹீரோ பிரஷாந்த் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.
அட இவரா
இந்நிலையில், ஜீன்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரஷாந்த் கிடையாதாம். முதன் முதலில் ஜீன்ஸ் படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் அபாஸ் தானாம். இயக்குனர் ஷங்கர் முதலில் இந்த கதையை அபாஸ் இடம் கூறியுள்ளார்.
இதற்கு அபாஸ் ஓகே சொல்லி தனது மேனேஜரை பேச சொல்கிறேன் என கூறிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை, அபாஸ் திடீரென படத்திலிருந்து நீக்கப்பட்டு, பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க வந்துள்ளார். இந்த தகவலை நடிகர் அபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனக்கு இப்படி நடந்துவிட்டதே என்று கோபம் கூட இல்லாமல், எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், படத்தின் பூஜைக்கு அபாஸ் சென்றாராம் என்பது குறிப்பிடத்தக்கது.
11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
