கமலுடன் இணைந்த வாரிசு நடிகர்.. தக் லைஃப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
தக் லைஃப்
கமல் ஹாசன் தனது கைவசம் பல படங்கள் உள்ளன. இதில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் தக் லைஃப்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களுடன் இணைந்து புதிதாக பிரபல வாரிசு நடிகர் ஒருவரும் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
அவர் வேறு யாருமில்லை நடிகர் கார்த்தியின் மகனும், பிரபல நடிகருமான கவுதம் கார்த்திக் தான். ஆம், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என்கின்றனர். அறிவிப்பு வீடியோ வெளிவந்த நிலையில் தற்போது முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கப்போவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
