கணக்கிட முடியாத அளவிற்கு லியோ படத்தில் நடிக்கும் நடிகர்கள்.. வரிசையில் புதிதாக இணைந்த மாஸ் பிரபலம்?
லியோ படம்
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியவரும் இப்படத்தின் 60 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்ததாக மீதமுள்ள 60 நாள் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார். இந்த ஜோடி 13 வருடங்களுக்கு பின் தற்போது தான் படத்தில் இணைந்துள்ளது. மேலும் சஞ்சய், மிஸ்கின், கவுதம் மேனன், அர்ஜுன், கதிர், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நட்சத்திரங்களே இத்தனை பேர் இருக்க, அறிவிக்கப்படாத சிலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல் வெளிவந்தது. முதலில் கமல் ஹாசன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டது. பின் ரோலெக்ஸ் ரோலில் சூர்யாவும் நடிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது.
இவரும் நடிக்கிறாரா
மேலும் சமீபகாலமாக தனுஷ் ஒரு முக்கிய கேமியோ ரோலில் நடிக்கிறார், அவருடை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரனும் லியோ படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாஸ்டர் மகேந்திரன் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் அவர் தன்னுடைய முகத்தை மாஸ்க் போட்டு மறைந்திருந்தார்.
அதற்க்கு தொகுப்பாளர் ஏன் முகத்தை காட்ட மறுக்குறீர்கள் என கேட்க, முக்கியமான படத்திற்கான கெட்டப்பில் இருக்கிறேன், அதனால் தான் முகத்தை காட்ட மறுக்கிறேன் என மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார். இதனால் லியோ படத்தில் தான் அவர் நடிக்கிறார் என தகவல் பரவ துவங்கிவிட்டது.
ஆனால், அவர் வேறொரு படத்திற்காக தான் இப்படியொரு கெட்டப் வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவி ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட சஞ்சீவ்.. ரொமான்டிக் வீடியோ

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
