குட் பேட் அக்லி படத்தின் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர்.. இப்போது வருத்தப்படுகிறார்
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக குட் பேட் அக்லி மாறியுள்ளது.
வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்
இந்த நிலையில், இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அதனை நடிகர் ஒருவர் மிஸ் செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தான்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, availability இல்லை, அது சரியாக அமையவும் இல்லை. ஆனால், திரையில் படம் பார்க்கும்போது அந்த ரோலை மிஸ் செய்துவிட்டேன் என வருத்தமாக இருந்தது என சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
