கனா சீரியல் நடிகை தர்ஷனாவிற்கு குழந்தை பிறந்தது.. நடிகை பகிர்ந்த போட்டோ
நடிகை தர்ஷனா
சின்னத்திரை நாயகிகள் கிடைக்கும் வாய்ப்புகள் நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தாலும் திருமண வாழ்க்கையிலும் சரியான நேரத்தில் இணைந்துவிடுகிறார்கள்.
அப்படி ஜீ தமிழில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் தொடர் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் தர்ஷனா.
அந்த சீரியல் மூலம் பிரபலம் கிடைக்க அப்படியே ஜீ தமிழில் ஒளிபரப்பான கனா சீரியலிலும் நடித்தார்.
குழந்தை
பல் மருத்துவரான இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அபிஷேக் என்பவருடன் நிச்சயதார்த்த செய்ய சீரியலில் இருந்து விலகினார்.
திருமணம் நடந்து கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் தர்ஷனா சில மாதங்களுக்கு முன் வெளியிட தற்போது அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. அவருக்கு மகன் பிறந்துள்ளார் என்பதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.