ரஜினியுடன் மோதும் முன்னணி நடிகர்.. வெறித்தனமான ரசிகராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா
ரஜினிகாந்த் ஜெயிலர்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் கூட இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை வருகிற 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ரஜினியுடன் மோதும் நடிகர்
இந்நிலையில், அதே தேதியில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக மட்டுமல்லாமல் பக்தராகவும் இருக்கும் லாரன்சின் படம் ரஜினியின் ஜெயிலர் படத்துடன் மோதுகிறதா? என ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று..

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் News Lankasri

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu
