தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான ராகவா லாரன்ஸ் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து வருபவர். இவர் தற்போது தொடர்ந்து சில முக்கிய இயக்குநர்களுடன் பணிபுரிய இருக்கிறார். அதன்படி சந்திரமுகி 2, ருத்ரா, அதிகாரம் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெளியாக இருக்கின்றன.
ராகவா லாரன்ஸ் இன்று இவ்வளவு பெரிய நடிகராக மாறுவதற்கு பல்வேறு கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். அப்படியான நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
சுவாரஸ்யமான தகவல்கள்
நடிகர் ராகவா லாரன்ஸ் அவரின் சிறுவயதிலே brain tumor நோய்யால் பாதிக்கப்பட்டு இருந்தார். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லையாம். பின் கடவுளின் அருளால் அவர் அந்த நோய்யை வென்றிருக்கிறார்.
அந்நோய்யில் இருந்து மீண்ட பின் ராகவா லாரன்ஸ் ராகவேந்திராவின் தீவிர பக்தராகியிருக்கிறார். கடவுளின் ஆசீர்வாதமே அந்த நோய்யிலிருந்து தப்பிக்க உதவியது என ராகவா லாரன்ஸ் நம்பியுள்ளார். பின் லாரன்ஸ் என்ற தனது பெயரை ராகவா லாரன்ஸ் மாறியுள்ளார். மேலும் ராகவேந்திராவுக்கு தனது சொந்த செலவில் கோவிலையும் கட்டியுள்ளார்.
அவரின் சிறுவயது காலத்தில் பொருளாதார ரீதியான பல போரட்டங்களை சந்தித்திருகிறார். சப்பாட்டிற்காக அவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் காரை துடைக்கும் வேலையை செய்திருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.
உழைப்பாளி பட பாடலுக்கு செட்டில் நன்றாக நடனமாடிய ராகவா லாரன்ஸை பார்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின் அவரே ராகவா லாரன்ஸை டான்ஸ் யூனியனில் சேர வைத்துள்ளார். அதன் மூலம் சிரஞ்சீவியின் பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
பல கோடி லாபத்துடன் ரிலீஸ் ஆகும் நானே வருவேன்

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
