நான் ரஜினிக்கு வில்லனா.. தயங்கிய பிரபல நடிகர், 50 கோடி சம்பளம் பேசிய லைக்கா
TJ ஞானவேல் - ரஜினி
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பின் TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வில்லன் குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.
தயங்கிய விக்ரம்
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சியான் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், முதலில் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் விக்ரம்.
பின் இயக்குனர் TJ ஞானவேல் நடிகர் விக்ரமை நேரில் சந்தித்து கதையை கூறியுள்ளார். கதை கேட்டவுடன் விக்ரமிற்கு பிடித்துப்போய்விட்டது. ஆனாலும், சற்று தயங்கியுள்ளார்.
இதனால் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் உடனடியாக விக்ரமிற்கு போன் கால் செய்து பேசியுள்ளார். ஒரே பேமெண்டில் ரூ. 50 கோடி சம்பளம் என ஆஃபர் கொடுத்துள்ளாராம். இதனால் ஏறக்குறைய இப்படத்தில் நடிக்க விக்ரம் சம்மதம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
வாரிசு படத்தை பின்னுக்கு தள்ள பொன்னியின் செல்வன் 2க்கு இன்னும் இத்தனை கோடி தேவையா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
