கமலுடன் இணையும் 61வயது முன்னணி நடிகர்.. இது சூப்பர் காம்போவாச்சே

By Kathick Jun 07, 2022 05:40 PM GMT
Report

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று பலருடைய மனதில் கேள்வி எழுந்துள்ளது.

கமல் - மகேஷ் நாராயணன்‌

கமலின் அடுத்த படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் மகேஷ் நாராயணன்‌ இயக்கவுள்ளதாக அவரே நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். மகேஷ் நாராயணன்‌ - கமல் இணையும் படத்திற்கு கமல் ஹாசன் திரைக்கதையை எழுதுகிறாராம்.

கமலுடன் இணையும் 61வயது முன்னணி நடிகர்.. இது சூப்பர் காம்போவாச்சே | Popular Actor To Join Hands With Kamal Haasan

சில வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் தேவர் மகன் 2 படத்தை தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது அப்படம் நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்தை கமல் ஹாசன் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

சூப்பர் காம்போ

இப்படத்தை தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளாராம். இந்நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

[H1JR6Y ]

இதற்குமுன், வெளிவந்த தேவர்மகன் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இதன்பின் வெளிவந்த சிங்காரவேலன் படத்தில் இருவரும் இணைந்து செய்த நகைச்சுவையை நம்மால் மறக்கவே முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி அமைகிறதா? இல்லையா? என்று..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US