பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்.. யார் தெரியுமா
கே.ஜி.எப் படத்தை இயக்கி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.
இவர் கே.ஜி.எப் 2 படத்தை முடித்துவிட்டு தற்போது நடிகர் பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

Suriya-வின் Etharkkum Thunindhavan Theatre-ல Release ஆக கூடாது - மிரட்டிய பிரபல அரசியல் கட்சி
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் முதல் முறையாக நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ் இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

இதனை 'ராதே ஷ்யாம்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரபாஸ் உறுதி செய்துள்ளார்.
கண்டிப்பாக ப்ரித்வி ராஜ் பிரபாஸுக்கு வில்லனாக தான், நடிக்கிறார் என்று தற்போதே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு துவங்கிவிட்டது.
இணையத்தை பற்ற வைத்த நடிகை சமந்தா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்