காதலர் தினம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்.. யார் தெரியுமா
காதலர் தினம்
இதயம், காதலர் தேசம் போன்ற நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கதிர். இவர் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காதலர் தினம்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் அளவில் ஹிட்டானது. இப்படத்தில் குணால், சோனாலி, கவுண்டமணி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்.
இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நம் அனைவருக்கும் நினைவிற்கு வரும் திரைப்படம் தான் அது காதலர் தினம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் குணால் கிடையாதாம்.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாம் தான், காதலர் தினம் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டாராம்.
ஆனால், ஸ்க்ரீன் டெஸ்ட் முடிந்தவுடன் இப்படத்திற்கு ஷாம் செட் ஆகமாட்டார் என இயக்குனர் கதிர் கூறிவிட்டாராம்.
இந்த தகவலை நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
