விஜய்யுடன் இருக்கும் இந்த நட்சத்திரம் யார் தெரியுமா.. அட இவரா, நீங்களே பாருங்க
நடிகர் விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 நடிக்கவுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் விஜய் பிரபல நடிகர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த படத்தில் விஜய்யுடன் இருக்கும் இந்த நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் இளவரசு தான். ஆம், ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை துவங்கினார் இளவரசு. கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களுக்கு இளவரசு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பின் நடிகராக என்டரி கொடுத்த இளவரசு பகவதி, ஜெமினி, புதிய கீதை, தம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த Pt Sir திரைப்படத்தில் கூட மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.