அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் நாயகி.. யாரு தெரியுமா?
அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் அட்லீ.
ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கண்ட இவர் அடுத்த படமே தளபதி விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அடுத்தடுத்து மெர்சல், பிகில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என மாஸ் படங்களை கொடுத்தார். இந்த ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுக்கு முதன்முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது.
அடுத்த படம்
தற்போது அட்லீ பிரம்மாண்டத்தின் உச்சமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஒரு படம் இயக்க உள்ளார்.
அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தொழில்நுட்ப விஷயங்களை ஹாலிவுட் கலைஞர்கள் பார்க்க உள்ளனர். ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்போது என்ன தகவல் என்றால் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.