மணி ரத்னம் பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை.. சிறப்பாக பயன்படுத்தி கொண்ட சிம்ரன்
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்தது. வசூலில் ரூ. 500 கோடியை கடந்து மிகப்பெரிய சாதனையை கூட படைத்தது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால், முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் வசூலும் முதல் பாகத்தை விட குறைவாக தான் இருந்தது. மணி ரத்னம் இயக்கத்தில் இதுவரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ள படம் தான் கன்னத்தில் முத்தமிட்டாள்.
மிஸ் செய்த நடிகை
கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்.
இந்நிலையில், சிம்ரன் நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க விருந்தது நடிகை பூமிகா சாவ்லா தானாம்.
ஆனால், சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இந்த ரோலில் நடிக்கக்கூடிய வாய்ப்பை சிம்ரனுக்கு சென்றுள்ளது. அந்த வாய்ப்பை தனது நடிப்பின் மூலம் சிம்ரன் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
மீண்டும் ரிலீஸ் ஆகும் வாரணம் ஆயிரம்.. இதுவரை செய்த வசூல் மட்டுமே இத்தனை லட்சங்களா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
