மீண்டும் ரிலீஸ் ஆகும் வாரணம் ஆயிரம்.. இதுவரை செய்த வசூல் மட்டுமே இத்தனை லட்சங்களா
வாரணம் ஆயிரம்
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம் வாரணம் ஆயிரம். தந்தை மற்றும் மகன் என இரண்டு ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இன்று வரை டாப் 5 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.
ரீ ரிலீஸ் வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி வாரணம் ஆயிரம் திரைப்படம் தெலுங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரீ ரிலீஸ் ஆகியுள்ள வாரணம் ஆயிரம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே வாரணம் ஆயிரம் படத்திற்கு ரீல் ரிலீஸில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
