மீண்டும் கமலுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா
கமல் ஹாசன்
கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார்.
அதுமட்டுமின்றி அப்படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு கமல் - மணி ரத்னம் கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

ராஜ் கமல் - ரெட் ஜெயிண்ட் - மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று முன்னணி நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கிறது.
கமலுடன் இணையும் நடிகை
இந்நிலையில், இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷா தேர்ந்தெடுத்துள்ளாராம் இயக்குனர் மணி ரத்னம்.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் திரிஷா நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
சீக்கிரம் அதிக வெடியை வாங்குங்கள், துணிவு பட டிரைலர் அப்படி இருக்கு- பிரபலம் போட்ட பதிவு