இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. அட இவரா, நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவரின் குழந்தையை பருவ புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் டிவியில் தனது முதல் பயணத்தை துவங்கிய இவர் தற்போது சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியுள்ளார்.
சிவாங்கி
அவர் வேறு யாருமில்லை சிவாங்கி தான். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நடிகையானார். சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது சன் டிவியில் வரப்போகும் ரவுடி பேபி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.