"லியோ" படத்தில் கேமியோ ரோலில் இந்த முன்னணி நட்சத்திரம் நடிக்கிறாரா - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
விஜய்யின் லியோ
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் "வாரிசு". இதனை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் "லியோ". இப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். மேலும், இதில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிளாக் பஸ்டர் திரைப்படமான "விக்ரம்" படத்திற்கு பிறகு "லியோ" படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என தகவல் வந்துள்ளது.
கேமியோ ரோலில் இவரா
படத்தின் மீது கொண்ட எதிர்பார்ப்பால் திரைப்பட வெளியீட்டுக்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ. 400 கோடி மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் "லியோ" படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் கேமியோ ரோலில் இசையமைப்பாளர் அனிருத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் விஜய்யுடன் இணைந்து அனிருத் நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நாயகன், இசையமைப்பாளர் என கலக்கும் ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
