குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. லேட்டஸ்ட் அப்டேட்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளார்.

ஆதிக் ரவி சந்திரன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சியுடன் நிறைவு பெற்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என சொல்லப்படுகிறது.

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறாராம். இதுவே அவருடைய அறிமுக தமிழ் திரைப்படமாகும்.
நகைச்சுவை நடிகர்
இந்த நிலையில், நகைச்சுவையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    