தளபதி 66 படத்திலிருந்து விலகிய இயக்குனர்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்
தளபதி 66
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தளபதி 66ல் முக்கிய கதாபாத்திரத்தில் சரத் குமார் நடிக்கிறார்.
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்காக தமிழில் வசனம் எழுத முதன் முதலில் இயக்குனர் ராஜூமுருகன் கமிட்டாகி இருந்தார்.
விலகிய இயக்குனர்
இந்நிலையில், தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்தை ராஜூமுருகன் இயக்கவுள்ளதனால், தளபதி 66 படத்தில் இருந்து விலகிவிட்டாராம் ராஜூமுருகன்.

அவருக்கு பதில் பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் கமிட்டாகியுள்ளார். பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டதை கூட நாம் பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சூப்பர்ஸ்டார் ஆவர் என்று 1997ல் கூறிய மூத்த நடிகர்.. இப்போ அவருடன் படத்தில் நடிக்கிறார் தளபதி
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இழுபறியாக உள்ள தொகுதி பங்கீடு; தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி - தவெக உடன் பேச்சுவார்த்தையா? IBC Tamilnadu