ஹீரோவாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.. படம் எடுக்க ரெடி என கூறிய இயக்குனர்

By Kathick Jun 14, 2023 05:30 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர்

இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்கள் உருவாகி வருகிறது.

ஹீரோவாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.. படம் எடுக்க ரெடி என கூறிய இயக்குனர் | Popular Director Will Direct Shankar

இதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. கண்டிப்பாக இப்படம் மாபெரும் சாதனையை தமிழ் சினிமாவிற்கு தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோவாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.. படம் எடுக்க ரெடி என கூறிய இயக்குனர் | Popular Director Will Direct Shankar

இயக்குனர் ஷங்கர் திரையுலகில் முதன் முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் என்ட்ரி கொடுத்தார். ஆனால், காலம் அவரை சிறந்த இயக்குனராக மாற்றிவிட்டது.

ஹீரோவாக ஷங்கர், ரெடி என கூறிய இயக்குனர்

இந்நிலையில், இயக்குனர் ஷங்கரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பேன் என பிரபல நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொம்மை படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே. சூர்யா கலந்துகொண்டார்.

ஹீரோவாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.. படம் எடுக்க ரெடி என கூறிய இயக்குனர் | Popular Director Will Direct Shankar

இதில், ஒரு இயக்குனரை வைத்து நீங்கள் படம் இயக்க வேண்டும் என்றால் யாரை வைத்து இயக்குவீர்கள் என கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா, 'ஷங்கரை ஹீரோவாக வைத்து படம் இயக்குவேன்' என கூறினார்.

ஹீரோவாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.. படம் எடுக்க ரெடி என கூறிய இயக்குனர் | Popular Director Will Direct Shankar

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் வில்லன் எஸ்.ஜே. சூர்யா தான் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US