ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட பிரச்சனை.. படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்

By Kathick Jan 31, 2023 06:30 AM GMT
Report

லால் சலாம்

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பின் தன்னுடைய மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட பிரச்சனை.. படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம் | Popular Person Out From Lal Salaam Movie

கேமியோ ரோலில் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்திற்கு பூஜை போட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

வெளியேறிய பிரபலம்

இந்நிலையில், லால் சலாம் படத்திலிருந்து திடீரென அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா வெளியேறிவிட்டாராம். இதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும், பூர்ணிமாவிற்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு தான் பூர்ணிமா இப்படத்திலிருந்து வெளியேற காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட பிரச்சனை.. படத்திலிருந்து வெளியேறிய முக்கிய பிரபலம் | Popular Person Out From Lal Salaam Movie

பூர்ணிமாவிற்கு பதிலாக வேறு யார் லால் சலாம் படத்திற்காக ஆடை வடிவமைப்பாளராக கமிட்டாகவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ஏற்கனவே பரதேசி, பா. பாண்டி, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுதோல்வியை சந்தித்த வாரிசு.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US