நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. மிகவும் பிரபலமான நடிகையாம்
நடிகர் விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது.
அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால், சினிமா வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதனால், தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் ஆகும்.
வைரலாகும் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் நடிகர் விஜய், தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யார் என கேட்டு, புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருப்பவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஹிமா பிந்து தான். இதயத்தை திருடாதே, இலக்கியா போன்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து.
இவர் சிறு வயதில் தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.