பிரபல பாடகர் ஹரிசரணின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரின் கியூட் போட்டோ
ஹரிசரண்
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமானவர் ஹரிசரண். இதுவரை சுமார் 2000 பாடல்களை பாடியிருக்கிறார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் இடம்பெற்ற உனக்கென இருப்பேன் என்ற பாடலை பாடி இருந்தார், அந்த பாடல் தேசிய விருதுக்கு எல்லாம் பரிந்துரைக்கப்பட்டது.
பின் பையா படத்தில் அவர் பாடிய துளி துளி மழையால் வந்தாளே பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான், டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத், விஷால் சந்திரசேகர் என பலரது இசையமைப்பில் பாடல்கள் பாடியிருக்கிறார்.
இப்போது நிறைய இசையமைப்பாளர்களின் Concertல் பாடி வருகிறார். இவர் 2013ம் ஆண்டு பவித்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பாடகர் ஹரிசரண் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு கியூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவரது மனைவியின் புகைப்படம்,
விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது?- படக்குழு தரப்பில் வந்த தகவல்