இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இவர் தனது திரை பயணத்தை தமிழ் திரையுலகில் ஆரம்பித்தார். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர் அடுத்தடுத்து ஒரே நடிகருடன் கூட்டணி அமைத்து மூன்று தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.
இப்படி தொடர்ந்து தனது வெற்றியின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இவருக்கு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட் பக்கம் சென்ற இவர் தற்போது இந்தியளவில் மாபெரும் நட்சத்திரமாக திலகம் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
அட இவர் தானா
அவர் வேறு யாருமில்லை இயக்குனர் அட்லீ தான். ஆம், இயக்குனர் அட்லீயின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஜவான் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிகாவா இல்லை நயன்தாராவா.. புகைப்படத்தை பார்த்து கன்பியூஸ் ஆன ரசிகர்கள்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri