கே.ஜி.எஃப் நடிகர் யாஷுடன் கைகோர்க்கும் தமிழ் இயக்குனர்.. அட இவரா
யாஷ்
கே.ஜி.எஃப் 1, 2 படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். இவர் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் யாஷ் அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருடன் கைகோர்க்க போகிறார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கூட்டணி
அதன்படி பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தான் யாஷ் நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. யாஷிடம் தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.
கதையை கேட்டு முடித்தவுடன் கண்டிப்பாக நாம் இருவரும் இணைக்கிறோம் என்று கூறிவிட்டாராம் யாஷ். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் தோல்வியடைந்த சுறா படம் செய்த வசூல்.. இவ்வளவு தானா

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
