பிரபல முன்னணி நடிகருடன் பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. அவரே வெளியிட்ட புகைப்படம்
மாளவிகா மோகனன்
பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த மாளவிகா அடுத்ததாக பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். கடந்த நான்காம் தேதி மாளவிகாவிற்கு பிறந்தநாள்.
அவருக்கு திரையுலகில் உள்ள நடிகர், நடிகர்களும் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில், மாளவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டுள்ளார்.
மாளவிகா மோகனன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து பேட்ட, மாஸ்டர் என இரு திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படங்கள்..