பிக் பாஸ் 7ல் களமிறங்கும் வாரிசு நடிகை.. இவர் விஜய்க்கே ஷாக் கொடுத்தவர் ஆச்சே
பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7 தான் தற்போது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி. வருகிற அக்டோபர் 1ல் துவங்கும் இந்த நிகழ்ச்சியில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பிக் பாஸ்-ல் இரண்டு வீடு என கமல் கூறியதும், நிகழ்ச்சியின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இதில் எப்படி போட்டியாளர்கள் போட்டியிட போகிறார்கள். விதிமுறைகள் எல்லாம் எப்படி இருக்க போகிறது என ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து அவர் என்ட்ரி கொடுக்க போகிறார், வெள்ளித்திரையில் பிரபலமான ஒருவர் பிக் பாஸ் களமிறங்க போகிறார் என ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது.
வாரிசு நடிகை
இந்நிலையில், தற்போது ஏறக்குறைய உறுதியான தகவல் என ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கர் பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா ரோலில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் விஜய்க்கே ஷாக் கொடுக்கும் அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
