கவின், பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த வெறித்தனமான வில்லன் நடிகர்.. யார் தெரியுமா
கவினின் 6வது படம்
கவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டார் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து கவின் நடிக்கும் அவருடைய 6வது திரைப்படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் கூறப்பட்டது.
சுவாரஸ்யமான அப்டேட்
இந்நிலையில், இதை தொடர்ந்து தற்போது சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
வெறித்தனமான வில்லனாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா கவினின் 6வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க அறிமுக இயக்குனர் சிவபாலன் இப்படத்தை இயக்குகிறார்.

இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri