போஸ்டர்கள் மூலம் சண்டையிட துவங்கிய விஜய் - அஜித் ரசிகர்கள்! வைரலாகும் போட்டோஸ்
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் துணிவு.
சமீபத்தில் தான் அப்படத்தின் அதிகாரபூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். அஜித்தின் மாஸ்ஸான லுக்கில் வெளியான அந்த போஸ்டர் ரசிகர்களிடையே செம வைரலாகியது.
போஸ்டர் சண்டை
இந்நிலையில் அப்படத்தின் பெயரை அறிவித்தவுடன் விஜய்யின் ரசிகர்கள் துணிவு பட பெயரை குறிப்பிட்டு அஜித் ரசிகர்களை தாக்கும் வகையில் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் வாரிசு பட பெயரை குறிப்பிட்டு விஜய் ரசிகர்களை தாக்கி போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
மேலும் தற்போது அந்த போஸ்டர்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மருமகளை பார்த்துள்ளீர்களா