அஜித், வடிவேலு ஒன்றாக நடிக்காததற்கு நிஜ காரணம் இதுதான்- இயக்குனர் தரப்பில் வந்த தகவல்
அஜித்தின் துணிவு
அஜித் தமிழ் சினிமாவில் இதுவரை 60 படங்கள் நடித்துவிட்டார். அவரது 61வது படமான துணிவு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வெற்றிகரமாக நடக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
குஜராத்தில் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு தான் அஜித்தின் துணிவு பட கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எப்போதும் அனைவருடனும் அன்பாக பழகும் அஜித்திற்கு சினிமாவில் ஒருவரிடம் சண்டை வந்துள்ளது.
சண்டை என்றால் வாய் பேச்சு, அடிதடி இல்லை, இதிலும் அஜித் தனி ஸ்டைல் தான் பயன்படுத்தியுள்ளார்.
யாருடன் சண்டை
2002ம் ஆண்டு அஜித்-ஜோதிகா நடிப்பில் எழில் இயக்க வெளியாகி இருந்த திரைப்படம் ராஜா. படத்தில் வடிவேலு-அஜித் மாமன் மருமகன் என நடிப்பார்கள், படத்தில் வாடா போடா என பேசியிருக்கிறார்கள்.
ஆனால் படப்பிடிப்பை தாண்டி வடிவேலு வாடா போடா என அஜித்தை கூற அது அவருக்கு நெருடலாக இருக்க இயக்குனர் எழிலிடம் போய் கூறியுள்ளார். படத்தில் ஓகே அதைதாண்டி வாடா சொல்வது எல்லாம் நன்றாக இல்லை என கூற அதை வடிவேலுவிடம் இயக்குனரும் கூறியுள்ளார்.
வடிவேலு அப்படி தான் கூப்பிடுவேன், எனக்கு என்று ஒரு இமேஜ் உள்ளது என கராராக பேசியுள்ளார். ஆனால் அஜித் வடிவேலுவை பொறுத்துக் கொண்டு படத்தை அமைதியாக நடித்து முடித்துள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு வடிவேலுவை தனது படங்களில் கமிட் செய்யாமல் இருந்துள்ளார் அஜித்.
சீரியல் நடிகை ரச்சிதாவுடன் விவாகரத்து பெற்ற தினேஷ் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ