கேரளா வயநாட்டில் அவதிப்படும் மக்கள்.. நிதி உதவி செய்த நடிகர் பிரபாஸ்! எவ்வளவு தெரியுமா
கேரளா வயநாடு
கேரளாவில் வயநாட்டில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவின் காரணமாக மண்ணுக்குள் புதைந்தது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் கஷ்ட்டப்படும் மக்களுக்கு திரையுலக சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா, விக்ரம், மோகன்லால், மம்மூட்டி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் தொடர்ந்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
பிரபாஸ் செய்த உதவி
இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஸ் ரூ. 2 கோடி நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் கஷ்ட்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவி செய்துள்ள பிரபாஸுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
