நடிகர் பிரபாஸை விமர்சித்த பிரபல நடிகர்!! குவியும் கண்டனம்..
பிரபாஸ்
தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படம் மூலம் பிரபலமான இவர் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த படம் கல்கி 2898 ஏடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
குவியும் கண்டனம்
இந்த நிலையில், பிரபல இந்தி நடிகரான அர்ஷத் வர்சி கல்கி படத்தில் பிரபாஸின் நடிப்பு பார்ப்பதற்கு காமெடியாக இருந்ததாக சமீபத்தில் கூறினார்.
இதற்கு பிரபாஸ் ரசிகர்களும், மற்றும் சினிமா நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது, தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவரான விஷ்ணு மஞ்சு ஒரு கடிதம் எழுதி இந்தி திரைப்படம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார்.
அதில், பிரபாஸ் போன்ற ஒரு முன்னணி நடிகர் பற்றி தவறாக பேசுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் எனவும், நாம் அனைவரும் ஒரு குடும்பம் அதனால் அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுமாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்தியாவையே ஆட்டம்காட்ட கூடிய பெரிய ஸ்கேமுக்கு பாஜக ரெடியாகுது - பத்ம பிரியா கொந்தளிப்பு IBC Tamilnadu

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
