தீபிகா படுகோனின் பத்மாவத் படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்.. காரணம் என்ன தெரியுமா
பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் மட்டுமே பிரபலமாக வலம் வந்த நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்திற்கு பின் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் ஹீரோவாக வலம் வருகிறார் பிரபாஸ்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். பிரபாஸ் நடித்து வெளிவந்த இந்த படத்தில் அவருடன் இணைந்து தீபிகா படுகோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பத்மாவத்'. இந்த படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
காரணம்
அதில், சாஹித் கபூர் நடித்த மன்னர் கதாபாத்திரம் முதலில் பிரபாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் பிரபாஸ் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாகவும்.
பாகுபலி படத்தின் கதாபாத்திரம் போல் தனித்து நிற்கும் பாத்திரமாக 'பத்மாவத் படம் அமையவில்லை என்பதாலும் இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
