நடிகர் பிரபாஸுக்கு இத்தாலியில் இவ்வளவு பெரிய வில்லா இருக்கா?- வாடகை எவ்வளவு தெரியுமா?
நடிகர் பிரபாஸ்
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்திற்க வந்தவர் நடிகர் பிரபாஸ். அப்படம் அவருக்கு கொடுத்த பிரபலம், அதன்பிறகு அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே Pan India படமாகவே இருக்கிறது.
ஆனால் சரியான வெற்றி தான் அவருக்கு கிடைக்கவில்லை, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் அந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்திவில்லை, மாறாக நிறைய சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
பிரபாஸ் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் வில்லா
படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக்கொண்டு வரும் பிரபாஸ் இத்தாலியில் அதிக விலை கொடுத்து வில்லா ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இத்தாலியில் பல கோடி போட்டு வாங்கி உள்ள அந்த வில்லாவை டூரிஸ்ட்களுக்கும், அங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கும் நடிகர் பிரபாஸ் வாடகைக்கு விட்டுள்ளாராம்.
அதன் மூலம் மாதம் ரூ. 40 லட்சம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா?- அட இவங்கதானா

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri
