அடுத்த 1000 கோடி வசூல் படம் ரெடி.. பிரமாண்ட பட்ஜெட்டில் வரும் பிரபாஸின் ராஜா சாப் மோஷன் போஸ்டர்..
பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பின் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய ஹீரோ பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

கல்கி உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி ராஜா சாப். இப்படத்தை மாருதி என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், யோகி பாபு, நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
மோஷன் போஸ்டர்
இந்த நிலையில், இன்று நடிகர் பிரபாஸின் பிறந்தநாள் என்பதினால், பிரபாஸின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்படி, ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

திகில் கதைக்களத்தில் பிரபாஸ் நடித்துள்ள இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். இதோ அந்த மோஷன் போஸ்டர் வீடியோ..
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri