நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
பிரபு தேவா
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் பிரபு தேவா கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
ஏற்கனவே இரு பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கும் பிரபு தேவா, மீண்டும் இரண்டாம் திருமணத்திற்கு பின் பெண் குழந்தைக்கு தந்தையானார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், திரையுலகில் பிசியாக இருந்து வரும் நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் பிரபு தேவாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே கிட்டதட்ட ரூ. 150 கோடி இருக்குமாம்.
மேலும் இவருக்கு சென்னை மற்றும் மும்பையில் சொத்து வீடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி பல சொகுசு கார்களை பிரபு தேவா வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
