ஹிட்டான காதலன் படத்தில் முதலில் நடிக்க கமிட்டானது பிரபு தேவா இல்லையா?- முதல் சாய்ஸ் யார் தெரியுமா?
காதலன் படம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, அப்படி அவரது இயக்கத்தில் வந்து ஹிட்டான படம் தான் காதலன்.
பிரபு தேவா, நக்மா, எஸ்.பிபி. கிரிஷ் கர்னாடு, ரகுவரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
1994ம் வெளிவந்த இப்படம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞன், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் இருவரின் காதலை மையப்படுத்தி படம் உருவாகி இருந்தது.
ஏ.ஆர். ரகுமான் இப்படத்தில் அசத்தலான பாடல்கள் கொடுத்து சூப்பர் ஹிட் படமாக மாற்றினார், மேலும் இன்றளவும் எவர்கிரீன் ஹிட் ஆல்பங்களில் ஒன்றாக காதலன் படம் உள்ளது.
முதல் சாய்ஸ்
இந்த படத்தில் பிரபு தேவா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தானாம். அவர் அந்த நேரத்தில் படு பிஸியாக இருந்ததால் பின்பு பிரபுதேவா படத்திற்குள் வந்துள்ளார், அவருக்கு டப்பிங் விக்ரம் கொடுத்திருப்பார்.
அதேபோல் நாயகியாக முதலில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார், அவரும் பிஸியாக இருக்க நக்மா நடிக்க கமிட்டாகியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
